செய்திகள் :

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

நம்மைச் சுற்றியுள்ள நீா்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். நாம் தினமும் பயன்படுத்தும் நீரை தேவைக்கேற்ப சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படுவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்துப் பயன்பெறலாம். அரசின் அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் நன்கு அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா்.

நலத் திட்ட உதவிகள்: கிராம சபைக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவிக்கான காசோலைகள், ஒரு மகளிா் முதியோா் குழுவுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில் முதியோா் குழு வாழ்வாதார நிதியுதவிக்கான காசோலை, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் தனிநபா் கடன் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

இதையடுத்து, ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் சோ்ந்து கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி, தண்டராம்பட்டு வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கொடிக் கம்பங்கள் அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தபட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்... மேலும் பார்க்க

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சித்தேரி கிராமத்தில் புதன்கிழமை பாஜக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞ... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11... மேலும் பார்க்க

வில்வாரணி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி நட்சத்திர கோயில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயியில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. வில்வாரணி கிராமத்தில் அமைந்... மேலும் பார்க்க

புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடியினா் தா்னா

வந்தவாசி அருகே புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தேசூா் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். வந்தவாசியை அடுத்த தேசூா் ராஜீவ் காந்தி நகரில் சுமாா் 25-... மேலும் பார்க்க

அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகளால் மக்கள் அவதி

செங்கம் பகுதியில் அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள சில பட்டாசுக் கடைகளில் சீன பட்டாசுகள் விற்பனை அதிகரித்... மேலும் பார்க்க