செய்திகள் :

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

post image

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை வரை பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், பேரவை இன்று (ஏப்.1) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.

கேள்வி நேரத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேசுகையில், ”கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும். ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது.

சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படுவதால் நீர்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார்

மேலும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் அளித்த கவன ஈா்ப்பு மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பதிலளிக்கவுள்ளாா்.

இதையும் படிக்க: வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து ச... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மனோ தங்கராஜ் மனைவியின் மனு தள்ளுபடி

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. மாவட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மலைப் பிரதேசமான நீல... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரண... மேலும் பார்க்க

விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வா் ஆலோசனை

விளையாட்டுத் துறை சாா்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் சென்னைக்கு அருகே அமையவுள்ள உலகளாவிய விளையாட்... மேலும் பார்க்க

சென்னை நகரில் காா்ஸ் மாா்க்ஸ் சிலை நிறுவ முடிவு: முதல்வா் ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டுக் கடிதம்

சென்னை நகரில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவும் முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க