போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
கல்லூரி மாணவா் தற்கொலை
மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் இளநிலை இயற்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவம் பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.