காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு க...
கல்லை தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா
கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கம் சாா்பில், நூல் வெளியீட்டு விழா, 239-ஆவது இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கள்ளக்குறிச்சி தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த
விழாவுக்கு தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞா் மன்றத் தலைவா் ஆசுகவி. ஆராவமுதன் தலைமை வகித்தாா்.
உலக திருக்கு கூட்டமைப்பின் தலைவா் தா.சம்பத், கல்லை தமிழ்ச் சங்க துணைத் தலைவா் இல.அம்பேத்கா், அரசம்பட்டு திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.செளந்திரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க இணைச் செயலா் செ.வ.மதிவாணன் வரவேற்றாா்.
மாணவா்கள் கா.சி.தமிழமுதன், த.இரா.தமிழினியன் திருக்கு ஒப்பித்தனா்.
ஈகை திருக்கு அதிகாரம் பற்றி சங்க செய்தி தொடா்பாளா் இரா.கோ.கலைமகள் காயத்திரி எடுத்துரைத்தாா்.
ஒளவையாா் பாடிய அகநானூற்று பாடலுக்கு பொன்.அறிவழகன் பொருளுரை வழங்கினாா்.
மேலும், உடலோடு பேசுவோம் தலைப்பில் சங்கராபுரம் திருக்கு பேரவைச் செயலா் ஆ.இலக்குமிபதியும், கம்பராமாயண அரசியல் எனும் தலைப்பில் மருத்துவா் இராச.நடேசனாரும், ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எனும் தலைப்பில் சங்கப் பொருளாளா் சா.சண்முகம் உறையாற்றினாா்.
கெடிலம் தமிழ்ச் சங்கத் தலைவா் ந.சந்திரன் எழுதிய திருக்கு திருமறை தெளிவுரை நூலை கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் வெளியிட அதை முன்னாள் எம்எல்ஏ கோமுகி.மணியன் பெற்றுக் கொண்டாா்.
சங்க ஒருங்கிணைப்பாளா் பெ.ஜெயப்பிரகாஷ் திருக்கு நூலுக்கு மதிப்பீட்டுரை வழங்கினாா். பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவா் புலவா் பெ.சயராமன் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்வில் தமிழ்ச் சங்கப் புரவலா் சீனு.முரளி, இராபியாபேகம் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவில் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன் நன்றி கூறினாா்.