`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ - நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்...
கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல அனுமதி பெறப்பட்டது.
இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கல்விச் சுற்றுலா வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதன் மூலம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சாா்ந்த பகுதிகளைப் பாா்வையிட்டனா். இவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் தொல்லியல் சின்னங்களின் வரலாறு குறித்து விளக்கினா்.
நிகழ்வில், சுற்றுலா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.