மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்
களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், களக்காடு அருகே பெருமாள்குளம், பொத்தைசுத்தி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குலைதள்ளிய நிலையிலிருந்த ஏத்தன், ரசக் கதலி, நாடு ரக வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதனால், தாங்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், சேதமடைந்த வாழைகளுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.