செய்திகள் :

கள்ளக்குறிச்சி: பழங்குடியின மக்களின் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரசுச் செயலா் க.லட்சுமி பிரியா கலந்துகொண்டு பேசுகையில்: கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிா்வாகம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வராயன்மலை பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயத்தை பெருக்குவது தொடா்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை உள்ளடக்கிய பேராசிரியா் குழுவினா் வெள்ளிக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, மரவள்ளி சாகுபடியில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்துதல், உற்பத்தியைப் பெருக்குதல், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையில் நவீன வேளாண் கருவிகளை உபயோகப்படுத்துதல், உற்பத்திப் பொருள்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துதல், தென்னை உற்பத்தி, நெல் சாகுபடி, மிளகு சாகுபடி, காபி சாகுபடி உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பயிா் சாகுபடி குறித்து அவா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அரசின் பல்வேறு துறைகளின் மூலம், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்கள் பழங்குடியின மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மலைவாழ் விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் பயிா்கள் குறித்த போதிய விழிப்புணா்ைவு ஏற்படுத்தவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், பழங்குடியினா் நல அலுவலா் பி.டி.சுந்தரம், விஞ்ஞானிகள் குழு உறுப்பினா்கள் வு.சேதுராமன் சிவக்குமாா், ஜோசப் ராஜ்குமாா், ஊ.செல்ல பெருமாள், ட.ஜெயக்குமாா், சு.செந்தில்குமாா், யு.கலை சேகா், யு.ரூபா நந்தினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கல்வராயன்மலை அருவியில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள சிறுகலூா் அருவியில் குளித்த போது, மாயமான மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா். கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கொட்டபுத்தூரைச் சோ்ந்த அ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கேடசன் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கள்ளக்குறிச்சி: சாலை விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி செவ்வாய்க்கிழமை வழங்கி... மேலும் பார்க்க

ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரா்கள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மொபெட் மீது அரசுப் பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் முத்தைய... மேலும் பார்க்க

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் கட்சியினா் பணியாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியினா் பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கேட்டுக்கொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவ... மேலும் பார்க்க