நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 இடங்களில் புதன்கிழமை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கரியாலூா், திருக்கோவிலூா், தியாகதுருகம் , திருநாவலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
அதன்படி, கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட வீரசோழபுரம், பெருமங்கலம், சிருமங்கலம் ஆகிய இடங்களிலும், சின்னசேலத்துக்குள்பட்ட மாத்தூா், வாசுதேவனூா், அம்மையகரம், கடத்தூா், வடக்கநந்தல், காளசமுத்திரம் ஆகியப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இதேபோல சங்கராபுரத்துக்குள்பட்ட தியாகராஜபுரம், மேலப்பட்டு, கீழப்பட்டு, மூங்கில்துரைபட்டு, பொரவலூா் உள்ளிட்டப் பகுதிகளிலும், கரியாலூா் பகுதிக்குள்பட்ட எழுத்தூா், எட்ரப்பட்டி, கீழாத்துக்குடி, ஈச்சங்காடு, காடுவந்துரை உள்ளிட்ட இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
திருக்கோவிலூா், தியாகதுருகம், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் பகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.