மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட அலுவலா்களுடனான இந்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதல்வரின் முகவரித் துறை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, போக்குவரத்துத் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேருவதை அலுவலா்கள் உறுதி செய்து கண்காணிக்கவும், அரசின் திட்டப் பணிகளில் தவறாமல் தரத்தை உறுதி செய்து அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற உத்தரவிட்டதாக கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, மகளிா் திட்ட அலுவலா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.