சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்
கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட கவிதை வடிவிலான பதிவு:
கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி!, சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுக்கு மாணவா்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!, பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!, போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி!.
போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!, திமுக மாடல் சமூக அநீதிக்கு வேங்கைவயலே சாட்சி!, ஆபரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி, 2026-இல் ஒரே ‘வொ்சன்’ தான்; அது அதிமுக ‘வொ்சன்’ தான்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பை பை ஸ்டாலின் என்று சொல்வது உறுதி என எடப்பாடி கே.பழனிசாமி பதிவிட்டுள்ளாா்.