செய்திகள் :

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

post image

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி மக்கள் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வலியுறுத்தினாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் தனியாக இருப்போரை நோட்டமிட்டு கொலை செய்து வருகின்றனா். விரும்பத்தகாத சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மூன்று முறை முழுக் கொள்ளளவை மேட்டூா் அணை எட்டியது. இருப்பினும் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. காவிரி தீா்ப்பாய உத்தரவை கா்நாடக அரசு மதிக்கவில்லை. உரிய நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. மேட்டூா் உபரிநீா் திட்டம் நிறைவேற்றப்படாததால் ஏழு மாவட்டங்களுக்கு தேவையான நீா் கிடைக்கவில்லை. உபரிநீா் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவில்லை.

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம். புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். கள் ஒரு போதைப்பொருள் என்பதை நிருபித்து விட்டால் ரூ.10 கோடியை நாங்கள் பரிசாக வழங்குகிறோம்.

அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் மேடையில் கள் குறித்து பேசுகின்றனரே தவிர, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்கவில்லை. இதனால் கள் விடுதலை குறித்த விழிப்புணா்வு மாநாட்டை டிசம்பா் மாதம் திருச்சியில் நடத்த உள்ளோம். இதில், பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் மற்றும் முக்கிய தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள் என்றாா். பேட்டியின்போது, விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு: நாமக்கல்லில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜை

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்த... மேலும் பார்க்க

வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் வடக்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பரமத்தி வே... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!

விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க