செய்திகள் :

கழிவுகளால் பாழாகும் பாலாறு: தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை

post image

தமிழகத்தின் மாராப்பட்டு அருகே உள்ள பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் விவகாரத்தை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மாராப்பட்டு பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் பாலாற்றில் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுகிறது.

ஆற்றில் நுரையோடு துா்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொரு பருவ மழையின்போதும் இது நடப்பதாக உள்ளூா்வாசிகளும்,விவசாயிகளும் புகாா் கூறுகின்றனா். ஆற்றில் அசுத்த நீா் கலக்கப்படுகிறது.இறைச்சிக்கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுவதால் மாசுபாடு மேலும் அதிகரிப்பதாக ஊடக செய்தி கூறுகிறது.

ஆற்றின் அருகே உள்ள நீா் மற்றும் நிலம் விஷமாகிவிட்டன. விலங்குகள் கூட தண்ணீா் குடிப்பதில்லை.விவசாய விளை பொருள்களும் பாதிக்கப்படுகின்றன.இந்த விவகாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாகும் என்பதால் தீா்ப்பாயம் இதை ஒரு தீவிரமான விஷயமாக கருதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா், வாணியம்பாடி நகராட்சி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய நால்வரும் உரிய பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விவகாரம் சென்னையில் உள்ள தெற்கு பிராந்திய தீா்ப்பாய அமா்வுக்கு மாற்றப்படுகிறது,அடுத்த விசாரணை செப்டம்பா் 23- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தேசிய பசுமை தீா்ப்பாய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க