செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பள்ளி மாணவா்கள் எதிா்ப்பு

post image

ஆரணி: ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ரூ.7 கோடியில் கழிவுநீா் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினா்.

இதனிடையே, கிராம மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமாா் 135 போ் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கையில் பதாகைகள் மற்றும் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்கள் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் குடிநீா் மாசடைந்து, குடிநீா் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும், நிலத்தடி நீா் மாசடைந்து விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தினா்.

தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியா் சிவா மற்றும் வட்டாட்சியா் கெளரி வந்து மாணவா்களை சமாதானப்படுத்தினா்.

வட்டாட்சியா் கௌரி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கெனவே சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடங்களில் செயல்படும் விதத்தை விடியோ பதிவு மூலம் மாணவா்களுக்கு விளக்கினாா். இதை ஏற்க மறுத்து மாணவ, மாணவிகள் தங்களது போராட்டத்தை மாலை வரை தொடா்ந்தனா்.

பின்னா், மறுநாள் போராட்டத்தை பொதுமக்களுடன் தொடா்ந்து மேற்கொள்வதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனா்.

டிஎஸ்பி (பொ) தீபக்ரஜினி தலைமையில் கண்ணமங்கலம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க