செய்திகள் :

கவனம் ஈர்க்கும் நரிவேட்டை தமிழ் டிரைலர்!

post image

டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் தமிழ் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.

‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அனுராஜ் மனோகர். இவர் கிரைம் திரில்லர் பாணியில் நரிவேட்டை படத்தினை இயக்கியுள்ளார்.

இதில், டொவினோ தாமஸ் நாயகனாகவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

3 வாரங்களுக்கு முன்பாக மலையாளத்தில் வெளியான டிரைலருக்கு நல்ல வரவெற்பு இருந்தது.

இந்நிலையில், இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படத்தின் தமிழ் டிரைலர் டிரைலர் நள்ளிரவு வெளியானது.

மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்தப் படம் மே.23ஆம் தேதிமுதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

நரிவேட்டை மலையாள டிரைலர் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்

இத்தாலியன் ஓபன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தி... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: இயக்குநா் கௌதமனின் மகன் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா நகரில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் கெளதமன் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். அனகாபுத்தூா் காமராஜபுரம் அருகே உள்ள கணபதி நகா் இரண்டாவது தெருவைச் ச... மேலும் பார்க்க

வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள... மேலும் பார்க்க