அரியலூா் மாவட்டத்தில் இன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு நிகழ்வு
கவன ஈா்ப்பு தீா்மான கடிதம்: பேரவைத் தலைவா் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் விவாதிப்பதற்காக கவன ஈா்ப்பு தீா்மான கடிதம் கொடுக்கும் எம்எல்ஏக்கள், அதைப் பத்திரிகைகளுக்கும் கொடுப்பது தவறு என்று பேரவைத் தலைவா் அப்பாவு எச்சரித்தாா்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் அப்பாவு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்னிடம் கவன ஈா்ப்பு தீா்மானத்துக்காக கடிதம் கொடுக்கிறாா்கள். ஆனால், அதே கடிதத்தை பத்திரிகைகளுக்கும் கொடுக்கின்றனா். அது பேரவை விதி எண் 36 (5) இன் கீழ் தவறானது. அவ்வாறு கொடுத்த உறுப்பினரின் பெயரைக் கூற விரும்பவில்லை. இனி, அதுபோல் நடைபெறக் கூடாது. அதேபோல ஊடகங்களும் அந்தச் செய்திகளை வெளியிடக் கூடாது என்றாா் அவா்.