"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடலூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்குபாளையம் பகுதியில் இரும்பு தொழிற்சாலை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி வேறு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரும்புத் தொழிற்சாலையை இங்கு கொண்டுவந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மகுடஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முறையிட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா், வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையறிந்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளோம். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீஸாா் தெரிவித்தனா் என்றனா்.

