அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
காங்கயம் ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம்
காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிறைவுக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் அவா் பேசியபோது, ஒன்றிய பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 607 பணிகளை ரூ.43.47 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டியது, ஊராட்சி ஒன்றியத்தின் வருவாயை அதிகரித்தது, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தியது என இந்த ஒன்றியக்குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனுராதா, விமலாதேவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஒன்றிய அலுவலக ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.