செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாச்சியா் (பொறுப்பு) சரவணன், காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன், காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கருணை பிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.