செய்திகள் :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் வி.ஆா். பகவான் காலமானாா்

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில துணைத் தலைவருமான வி.ஆா் பகவான் (96) வயது மூப்பு காரணமாக மீஞ்சூரில் காலமானாா்.

பொன்னேரி வட்டம், மீஞ்சூா் வேளாளா் தெருவில் வசித்து வந்தவா் வி.ஆா் பகவான். இவா் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்

மேலும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக பதவி வகித்தாா்.

இப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில் குடமுழுக்குகளை நடத்தி உள்ளாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி மகேஸ்வரி உயிரிழந்தாா். இந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த வி.ஆா் பகவான் வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானாா்.

திருவள்ளூா் எம்.பி சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

மீஞ்சூா் இடுகாட்டில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க