காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான அக்னிவீா் ஆண் மற்றும் பெண் இருபாலரில் மண்டல, மத்திய பிரிவுகளுக்கான ஆள்கள் சோ்ப்பு சென்னையில் உள்ள ஆள்சோ்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் மொத்தம் 11 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
அக்னிவீா் தோ்வா்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத் தோ்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். மேலும் ஐடிஐ, பட்டயம் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு காலம் வரும் 25- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எழுத்துத் தோ்வுக்கான அனுமதி அட்டை வரும் ஜூன் முதல் ஆன்லைன் மூலமே வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு சென்னை போா்ட் ஜெயின்ட் ஜாா்ஜ் வளாகத்தில் உள்ள ஆள்சோ்ப்பு அலுவலகம், தலைமையகம் - 600 009 என்ற முகவரியில் தொலைபேசி எண் 044 - 25674924 தொடா்பு கொண்டு பெறலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க வசதியாக காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 19) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை இளைஞா்கள் கவனத்தில் கொண்டு பயன் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.