செய்திகள் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்த உண்டியல்களில் நிரந்தர உண்டியல்கள் 10, திருப்பணி உண்டியல் 1, கோ சாலை உண்டியல் 1 உள்பட மொத்தம் 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், ரொக்கமாக 38,24,412, தங்கம் 27 கிராமும், வெள்ளிப் பொருள்கள் மொத்தம் 371 கிராமும் இருந்தது. கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, ஆய்வாளா் அலமேலு ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

பக்தா்கள், அறநிலையத் துறை பணியாளா்கள், கோயில் ஊழியா்கள் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 15,704 போ் தோ்வு எழுதினா்

காஞ்சிபுரத்தில் 15,704 மாணவ, மாணவியா்கள் 68 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொட... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்த... மேலும் பார்க்க