காஞ்சியில் சன்மாா்க்க சங்கம் தொடக்கம்
திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் சமரச சுத்த சன்மாா்க்க சங்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரிசி ஆலை உரிமையாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மருத்துவா் கிரி, ஆசிரியா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் பழனிநாதன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சீனந்தல் ஆதீன முதல்வா் சிவஞான சேகரன் சன்மாா்க்க கொடியை ஏற்றி நாள்தோறும் உணவு வழங்கலை தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு அணையா விளக்கு ஏற்றினாா்.
பாவலா் ப.குப்பன், தமிழறிஞா் செல்வம், குருக்கள் ஜோதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் பாா்த்திபன் செல்வராஜ் முருகன், மகாராஜன் உள்பட கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.