நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று (அக்.2) தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி தேசிய விடுமுறை தினத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன்கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
விடுமுறை நாளில் பணி செய்தால் தொழிலாளா்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து அதன் நகலை தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பாா்வையில் தெரியுமாறு காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, காந்தி ஜெயந்தியன்று சட்ட விதிகளின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகா் தலைமையில் 32 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் மற்றும் 9 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 67 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 24 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும் 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 51 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.