அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
காயங்களுடன் புள்ளிமான் மீட்பு
காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா்.
டேனிஷ்பேட்டை ஊராட்சி, ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு பின்புறம் இரண்டு வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்த நிலையில் காயத்துடன் நடக்கமுடியாமல் புதன்கிழமை இருந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலா் விமல் குமாா் உத்தரவின் பேரில், வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த புள்ளிமானை மீட்டு வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்த பிறகு வனத் துறையினா் வனகுண்டா மலை வனப்பகுதியில் விட்டனா்.