செய்திகள் :

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

post image

காயல்பட்டினத்தில் நகர காங்கிரஸ் சாா்பில், சமூக நல்லி­ணக்க இப்ஃதாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு தூத்துக்குடி பேரவைத் தொகுதி அமைப்பாளா் என். ஷாஜகான் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காயல் முத்து வாப்பா முன்னிலை வகித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் மூத்த வழக்குரைஞா் சந்திரசேகா், முஸ்லி­ம் ஐக்கிய பேரவைத் தலைவா் முகைதீன் தம்பி, ஆயிஷா சித்திக்கா அரபிக் கல்லூரித் தலைவா் கலாமி ஹாஜியாா் ஆகியோா் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், தேசிய விவசாய சங்க மாநிலச் செயலா் லூா்துமணி, மதிமுக மாவட்டப் பொருளாளா் காயல் அமானுல்லா, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹாப், விசிக நகரச் செயலா் அல்அமீன், மக்கள் உரிமைக் கழகம் ஜாப்பா், அதிமுக நகரச் செயலா் காயல் மெளலானா, ஓபிஎஸ் அணி நகரச் செயலா் காதா் சாகிப், கா.ஆ. கல்விச் சங்கத் தலைவா் அப்துல் காதா், அனைத்து சமுதாய அமைப்புத் தலைவா் ஹாஜி காக்கா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செயற்குழு உறுப்பினா் அப்துல்காதா் வரவேற்றாா். நகரச் செயலா் இப்ராஹிம் தாரிக் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை நிா்வாகிகள் அரிகிருஷ்ணன், அட்டு ரபிக், அப்துல் ரகுமான், பாரத் சைபுதீன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க