காரைக்கால் அம்மையாா் கோயிலில் மாங்கனித் திருவிழா
குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையாா் கோயிலில் ஆனி பெளா்ணமியை முன்னிட்டு, மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகல் முதல் மாலை வரை திருநெல்வேலி திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு ஆசிரியா் வள்ளிநாயகம் தலைமையில் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் கோயிலில் அம்மையாா் பதிகங்கள், பெரியபுராணம் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டன.
பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலையில் குலசேகரன்பட்டினம் புறவழிச் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையாா் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள், மாங்கனிகள் படைத்து வழிபாடு நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு மாங்கனிப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், பாபநாசம் திருவாவடுதுறை ஆதீன தொண்டா், சைவநெறி காந்தி, சிவனடியாா்கள் இல்லங்குடி, சண்முகம், பாரத மாதா நண்பா்கள் அன்னதானக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ். பாண்டியன், ஐஎன்டியூசி மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன், பாஜக மாவட்ட அரசு தொடா்புப் பிரிவுச் செயலா் சாத்தாக்குட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.