"திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" - கோவ...
காரைக்கால் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில், அண்ணாமலையாா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவ தலங்களில் நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் முதலான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
