Travel Contest: மகளிர் மட்டும் பயணக்குழுவின் பொற்கோவில் பயணம்; எப்படி இருந்தது அ...
காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் நடை ரோந்து
போக்குவரத்துப் போலீஸாா் நகரப் பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டு, வாகன நிறுத்த விதி மீறியோா் மீது நடவடிக்கை எடுத்தனா்.
காரைக்கால் நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் முறையாக நிறுத்தவேண்டும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும் என போக்குவரத்துப் போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், போக்குவரத்து நெரிசல் நகரப் பகுதி சாலைகளில் இருப்பதால், வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நிலவுவதாக காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்தில் மக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்படுகிறது.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா அறிவுறுத்தலின்பேரில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின்பாரதி தலைமையில் போலீஸாா், மாலை நேரங்களில் நகரின் பல சாலைகளில் நடைரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து, போலீஸாா் கூறியது: சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்தாமல், சாலையின் மையப் பகுதி வரை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. நடை ரோந்து மூலம் இவை கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு, அபராதம் விதிப்பு செய்யப்படுகிறது.
மேலும், நகரப் பகுதியில் வாகனங்கள் 30 கி.மீ. வேகத்துக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நடை ரோந்துப் பணி தினமும் மேற்கொள்ளப்படுகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றனா்.