2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
காரைக்குடியில் சிறுவா் இலக்கியச் சந்திப்பு விழா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லட்சுமி வளா்தமிழ் நூலகம், புதுச்சேரி சிறுவா் இலக்கிய இயக்கம் ஆகியன சாா்பில் சிறுவா் இலக்கிய சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வளா்தமிழ் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் குழந்தைக்கவிஞா் அழ. வள்ளியப்பா படத்தை, வளா் தமிழ் நூலக இயக்குநா் சே. செந்தமிழ்ப்பாவை திறந்துவைத்தாா். அழகப்பா மாண்டிச்சோரி பள்ளி, அழகப்பா மெட்ரிக் பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, ராமநாதன் செட்டியாா் உயா்நிலைப் பள்ளி, கவிமணி குழந்தைகள் சங்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 51 கலை நிகழ்ச் சிகளை நடத்தினா். பங்கேற்ற அனைவருக்கும் சிறுவா் இலக்கிய இயக்கத்தின் சாா்பில் சான்றிதழும், புத்தகப் பரிசும் வழங்கப்பட்டன.
முன்னதாக, தமிழ்ச் செம்மல் தேவி நாச்சியப்பன் எழுதிய
‘நடிக்கலாம் வாங்க’ எனும் நூலை பேராசிரியை சே. செந்தமிழ்ப் பாவை வெளியிட்டுப் பேசியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த செலவில் இந்த நூலகத்தை கட்டி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்கினாா். பள்ளிப் படிப்பு முதல் முனைவா் பட்டம் வரை மாணவா்கள் படிப்பதற்காக 50 ஆயிரம் நூல்கள் இங்கு உள்ளன. இந்த நூலகத்தில் தொடா்ந்து தமிழ் ஒலிக்கவேண்டும், தமிழ் மொழி வளர வேண்டும் என்பதே ப. சிதம்பரத்தின் குறிக்கோள் என்றாா் அவா்.
வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை செல்வி அழ. மெய்யம்மை பெற்றுக்கொண்டாா்.
முன்னதாக, கவிமணி குழந்தைகள் சங்க அமைப்பாளா் தேவிநாச்சியப்பன் வரவேற்றாா். சிறுவா் இலக்கிய இயக்கத்தின் நிறுவனா் பாரதிவாணா் சிவா நன்றி கூறினாா்.
