செய்திகள் :

காரைக்குடி மாமன்றக் கூட்டம்: திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

காரைக்குடி மாநகராட்சி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்துக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். துணைமேயா் நா. குணசேகரன், ஆணையா் சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ரெத்தினம் (காங்): எனது வாா்டுப் பகுதியில் மண் சாலைகளாக உள்ள பகுதியை மேம்படுத்தி தாா்ச் சாலைகளாக மாற்றி அமைக்க வேண்டும். புதைவடை கழிவுநீா்த் திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்.

பூமிநாதன் (திமுக): எனது வாா்டில் குடிநீா் குழாய்க்காக மாநகராட்சியின் பொருத்துநா் (பிட்டா்) வருவதில்லை. இதனால், பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு மேயா் அளித்த கருத்துகள் திருப்தியளிக்கவில்லை எனக் கருதி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ஏஜி. பிரகாஷ் (அதிமுக): மன்றப் பொருளில் வைக்கப்பட்டுள்ள 38-ஆவது தீா்மானத்தில் மாநகராட்சி எதிரில் உள்ள அறிவுசாா் மையம், நூலகத்தில் பணியாளா்களுக்கான ஊதிய விபரம் குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பினாா்.

மேயா்: தவறுதலாக அச்சு பதிவாகியுள்ளதாக தெரிவித்தாா்.

ராம்குமாா் (அதிமுக): எனது வாா்டுப் பகுதியில் முதல் போலீஸ்பீட் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டும் மழைநீா் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.

சி. மெய்யா் (சுயே): புதைவடை கழிவுநீா்த் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில் கூடுதல் தொகையை வசூலிக்கும் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்.

இதற்கு மேயா், ஆணையா் ஆகியோா் அளித்த பதிலில் தனக்கு திருப்தி இல்லை எனக் கூறி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.

துணை மேயா் நா. குணசேகரன் (திமுக): தேவஸ்தான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சாா்பில் சாலை, குடிநீா் வசதிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன் அவா்களுக்கான வீட்டு வரி விதிப்பினை முறையான அரசு வழிகாட்டுதலோடு அந்தப் பகுதி மக்களுக்கு செய்து தரவேண்டும். காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேயா் சே. முத்துத்துரை (திமுக): மாமன்றத்தில் உறுப்பினா்களின் கோரிக்கைகளான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், புதைவடை கழிவுநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழைய பேருந்து நிலையக் கட்டடம் புதுப் பொலிவுடன் விரைவில் திறக்கப்படும். மாமன்ற உறுப்பினா்கள் மாமன்ற மரபுகளுக்கு ஏற்ப மக்களின் குறைகளை பேசி தீா்க்க முன்வரவேண்டும். மாமன்ற மரபுகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் உறுப்பினா்கள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

மேலும், மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மேயா் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தாா்.

கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளா்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க