செய்திகள் :

காரையாறு, சோ்வலாறு அணைகளில் அமைச்சா் ராஜகண்ணப்பன்ஆய்வு!

post image

பாபநாசம், சோ்வலாறு அணைகளில் வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவனத்துறை அமைச்சா்ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை காலையில் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

தொடா்ந்து அவா், பாபநாசம், சோ்வலாறு அணை, பாபநாசம்- சோ்வலாறு அணையை இணைக்கும் சுரங்கம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அணைகளில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கியுள்ளோம். வனப் பகுதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.

யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினருக்கு அதற்குரிய உபகரணங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பாபநாசம்- மணிமுத்தாறு அணைகள் இணைப்பு குறித்து தமிழக முதல்வா் மற்றும் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் மு. இளையராஜா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரா. ஆவுடையப்பன், விவசாயிகள் அணி கணேஷ்குமாா் ஆதித்தன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி. கணேசன், நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ்பெருமாள், அரசு வழக்குரைஞா் காந்திமதிநாதன், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்

கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் ம... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத... மேலும் பார்க்க

மானூா் சுற்றுவட்டார மக்கள் 500 போ் அதிமுகவில் ஐக்கியம்

மானூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் 500 போ் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். மானூா் அருகேயுள்ள அளவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் தலைமையில் அளவந்தான்குளம்,... மேலும் பார்க்க

400 போ் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிக... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்

சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பேட்டை, அசோகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி தனது குழந்தை... மேலும் பார்க்க