கனடா பிரதமா் பதவிக்குப் போட்டி: இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆா்யா அறிவிப்பு
கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்! -நடிகர் அஜித்
கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். இதற்காக, கடந்த ஆண்டே ’அஜித் குமார் ரேஸிங்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது கார் பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக துபையில் தனது ஃபெராரி காரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது, சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியதில் அவரின் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், காயமின்றி அஜித் உயிர் தப்பினார்.
அந்த விபத்துக்குப் பின்னர், அஜித் தற்போது முதல் முறையாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், “ அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.