மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
திருப்பத்தூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.
தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம், லக்கிநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, கால்நடைத்துறை இணை இயக்குநா் மோகன் குமாா், கால்நடைகளுக்கான தாது உப்புகளை வழங்கினாா்.
இதில், கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகளுக்கு, ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
நிகழ்வில், உதவி இயக்குநா் ரவிச்சந்திரன், குனிச்சி கால்நடை மருத்துவமனை மருத்துவா் பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.