கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி
தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீரபாண்டியில் செயல்பட்டு வரும் தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாட்டு பண்ணையம், வெள்ளாடு வளா்ப்பு, நாட்டுக் கோழி வளா்ப்பு ஆகியவை குறித்து 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ.3,000 செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் தங்களது 2 மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஓட்டுநா் உரிமத்தின் நகல், கல்வி, ஜாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தலைவா், கால்நடை விரிவாக்கக் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி-625 534 என்ற முகவரிக்கு வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரங்களை கைப்பேசி எண்: 86674 28982-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.