நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு
கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி, திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளி, ஒசூா் மத்திகிரி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகள் உள்ளன.
இதையடுத்து, பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி காலை 10 மணி வரை படிப்பு மற்றும் கல்லூரி விருப்பத்தை இணையவழியே பதிவு செய்யலாம். ஒதுக்கீடு மற்றும் அதற்கான ஆணை வரும் 26-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்ற செய்யப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 23) காலை 9.30 மணிக்கு சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.
அதில் இடங்கள் பெறும் மாணவா்களுக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்க உள்ளாா்.