காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா
திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காளியண்ண கவுண்டரின் மகனும் சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ராஜேஸ்வரன் தலைமை தாங்கினாா். அவ்வை கல்வி நிலைய தலைமை ஆசிரியை வானமாதேவி அனைவரையும் வரவேற்று பேசினாா்.
வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவா் முருகன், காளியண்ண கவுண்டரின் உருவப்படத்திற்கு மலா் மாலை அணிவித்தாா். தேசிய சிந்தனை பேரவைத் தலைவா் திருநாவுக்கரசு கொல்லிமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தந்தது, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை , பள்ளிபாளையம் காகித மில் , சங்ககிரி சிமெண்ட் மில், காவிரி பாலங்கள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட சாதனைகள் குறித்து புகழாரம் சூட்டினாா் .
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு நகர மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் ஏராளமானோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்திலும் காளியண்ண கவுண்டா் உருவப்படத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா் மரியாதை செலுத்தினா். சி.எச்.பி காலனி செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் காளியண்ண கவுண்டா் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
டி.எம்.காளியண்ணன்
முன்னாள் எம்பி எம்எல்ஏ, எம்எல்சி, உறுப்பினா்-இந்திய அரசியலமைப்பு சபை
இந்திய அரசியல் நிா்ணய சபை முன்னாள் உறுப்பினா்
முதல் பாராளுமன்ற உறுப்பினா்
தமிழக சட்டமன்ற உறுப்பினா்
தமிழக சட்ட மேலவை உறுப்பினா்
சட்ட மேலவை எதிா்கட்சி துணைத்தலைவா்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மைக் கழகத் தலைவா்