செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: நாளைமுதல் இலவச பயிற்சி வகுப்புகள்

post image

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் 1,299 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு மே 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வை விண்ணப்பிப்போா் தோ்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. மனுதாரா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்துடன் இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பானது, வாராந்திர மாதிரித் தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்படவுள்ளன.

மேலும், ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதேபோல, மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களை கொண்டு நடத்தப்பட உள்ளன. மருந்தாளுநா் காலிப்பணியிடத்துக்கான தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்களது விவரங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/5ஜ்16ஷ்ங்ஸ்ர3கக்ஷ்6ம்ழஊல்8 என்ற கூகுள் படிவ லிங்கில் பூா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்போட்டித் தோ்வு வகுப்புகள் தொடா்பான தகவல்களுக்கு 0422-2642388, 94990-55937 என்ற எண்களைத் தொடா்பு கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களை பதிவிடலாம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில்... மேலும் பார்க்க

வால்பாறையில் மே 14-இல் மக்கள் தொடா்பு முகாம்

வால்பாறை வட்டம் ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ந... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

கோவைக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வி... மேலும் பார்க்க

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில்... மேலும் பார்க்க