திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வ...
காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!
கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில சிறுத்தை வளா்ப்பு பிராணிபோல நுழைந்தது. காவல் நிலையத்தில் உள்ள அறைகளுக்குள் சென்று சுற்றிய சிறுத்தை சிறிது நேரத்தில் தானாகவே வெளியேறியது.
காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா் செய்வதறியாமல் காத்திருந்து சிறுத்தை வெளியே சென்றதும் அவசரஅவசரமாக கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துவிட்டாா்.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, காவல் நிலையம் அருகில் மாரியம்மன் கோயில் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. சாலையிலும் வாகன போக்குவரத்து இருந்துள்ளது. மேலும் காவல் நிலையத்தை சுற்றி குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில் காவல் நிலையத்துக்குள் சிறுத்தை நுழைந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.