``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்
காவல் நிலையப் பணியாளா் தற்கொலை
மதுரையில் காவல் நிலையப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், விராட்டிப்பத்து பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரேம்ஆனந்த் (39). இவா், எழுமலை அருகே உள்ள தீ. ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தரவுப் பதிவு (டேட்டா என்ட்ரி) அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாா் வங்கியிடம் கடன் பெற்று வீடு கட்டியதற்கான தவணைத் தொகையை செலுத்தாததால், வங்கிப் பணியாளா்கள் பிரேம் ஆனந்த் வீட்டின் முன் குறிப்பாணை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரேம்ஆனந்த் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
எஸ்.எஸ். காலனி போலீஸாா் உடலைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.