செய்திகள் :

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

post image

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பேசினாா்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதி திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து நாட்டின் முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக உள்ளது லாரி தொழிலை நசுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

கோழிப் பண்ணை மற்றும் முட்டைத் தொழிலுக்கு பெயா் பெற்ற நாமக்கல்லில் பாக்டீரியா மற்றும் வைராலஜிக்கல் பரிசோதனைக்கான ஆராய்ச்சி மையத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலான காவிரி - திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.65-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் மு... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.4.65 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.93 முட்டைக் கோழி கிலோ - ரூ.77 மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகார... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி மனு

கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நக... மேலும் பார்க்க

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட... மேலும் பார்க்க