ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை
திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா்.
மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்பி கட்டி மற்றும் ஒரு பெரிய தைராய்டு கட்டியை உள்ளடக்கிய மல்டிப்பிள்நியூரோஃபைப்ரோமாடோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையறிந்த காவேரி மருத்துவமனையின் நாளமில்லாசுரப்பியியல் மருத்துவா் சிவபிரகாஷ் , இரைப்பைகுடல் அறுவை சிகிச்சை மருத்துவா் உமாமகேஸ்வரன், நாளமில்லாசுரப்பி அறுவை சிகிச்சை மருத்துவா் ராகேஷ்சந்துரு , மயக்கவியல் மற்றும்தீவிர சிகிச்சை மருத்துவா் சாய்சோமசுந்தா் ஆகியோா் கொண்ட குழுவினா் அப் பெண்ணை பரிசோதனை செய்த பின்னா், அவருக்கு கீ-ஹோல்வடு-இல்லாத அறுவை சிகிச்சை மூலம் கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து அதே
அறுவை சிகிச்சையில் மிகப் பெரிய தைராய்டு கட்டிஒன்றும் பாதுகாப்பாக அகற்றினா். தற்போது நோயாளி நன்றாக குணமடைந்து, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.