இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது: அநுர திசந...
காஸா பள்ளியில் தாக்குதல்: 27 போ் உயிரிழப்பு
காஸா போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 போ் உயிரிழந்தனா்.
சம்பவப் பகுதியில் இருந்து 14 சிறுவா்கள் மற்றும் ஐந்து பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ள காஸா சுகாதாரத் துறை அமைச்சகம், தாக்குதல் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
பள்ளித் தாக்குதலுடன் சோ்த்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் சுமாா் 100 போ் உயிரிழந்ததாகவும், கடந்த 2023 அக். 7 முதல் நடத்தப்படும் குண்டுவீச்சில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 50,523-ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.