செய்திகள் :

காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசை கண்டித்த ராமதாஸ்!

post image

மத்திய அரசு சமையல் எரிவாயுவின் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது நாடு முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

விலையேற்றத்தின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.

காஸ் சிலிண்டர்

இந்த விலை உயர்வுக்கு எதிராக, கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் லாபத்தை மக்களுக்கு அளிக்காமல் அரசே எடுத்துக்கொள்வது தவறு எனக் குரலெழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

ராமதாஸின் பதிவில், "சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்; உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.

மக்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே எடுத்துக்கொள்வதா?

அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல்

எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடா... மேலும் பார்க்க

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடு... மேலும் பார்க்க