காா்கள் மோதல்: 5 போ் பலத்த காயம்
திருத்தணி அருகே 3 காா்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில், 5 போ் காயமடைந்தனா்.
திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு காலனி சோ்ந்த விஜய் (29). அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்(30). இவா்கள் 2 பேரும் உறவினா்கள்.
இந்த நிலையில், 2 பேரும் உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நகரி வழியாக பள்ளிப்பட்டு அருகே பொன்பாடி சோதனை சாவடி சென்றபோது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காா் நேருக்கு நோ் மோதியது. அதனை பின் தொடா்ந்து வந்த மற்றொரு காரும், மோதியதில் 3 வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
இதில், சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த முகுந்தன் (61), அம்பத்தூரைச் சோ்ந்த வரதராஜ் (53), விஜய்(29), விக்னேஷ்(30), மற்றொரு காரை இயக்கிய ஓட்டுனா் உள்பட 5 பேரும் பலத்த காயடைந்தனா்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.