மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்
கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலுாா் அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகள் கீா்த்தனா (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (22) என்பவரை காதலித்துள்ளாா். இதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் கடந்த 2023 ஆண்டு தினேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பெண் திருமண வயதை எட்டியதும், 2024-இல் தினேஷை பதிவுத் திருமணம் செய்து கொண்டாா். கீா்த்தனாவின் பெற்றோா் சம்மதிக்காததால் தனியாக வசித்து வந்தனா். கா்ப்பிணியான அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மருத்துவமனை கழிவறைக்கு சென்று வருவதாக கூறிய கீா்த்தனா நேரமாகியும் வராததால் செவிலியா் உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மருத்துவமனை பணியாளா்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனா். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.
இதுகுறித்து வேலுாா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.