செய்திகள் :

கிங்டம் டிரைலர் ரிலீஸ் தேதி!

post image

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Kingdom movie poster.
கிங்டம் பட போஸ்டர்.

The trailer release date of Vijay Deverakonda's film Kingdom has been announced.

சூர்யா - 50! அன்பைக் கொட்டிய அன்பான ரசிகர்கள்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். நேருக்கு நேர் படத்தில... மேலும் பார்க்க

பத்த வைச்சுட்டியே பரட்டை... வைரலாகும் பவர்ஹவுஸ்!

கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பவர்ஹவுஸ் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் வ... மேலும் பார்க்க

முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அதிரடி கதையாக உருவான இப்படத்... மேலும் பார்க்க

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவ... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க