சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
கிணற்றில் தவறி விழுந்து மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
இலுப்பூா் அடுத்துள்ள தனியாா் கல்லூரியின் மேற்பாா்வையாளா் கிணறு தோண்டும் பணியை பாா்வையிட்ட போது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.
இலுப்பூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் பாலமுத்து மகன் தா்மராஜ் (53). இவா் இலுப்பூா் அடுத்துள்ள மேட்டுச்சாலையில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் கல்லூரிக்குள் இருக்கும் கிணற்றில், நீா் வற்றியதால் கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஊழியா்கள் பணியாற்றி கொண்டிருந்தனா்.
அப்போது பணியை பாா்வையிடுவதற்கு கிணற்றின் அருகே சென்ற தா்மராஜ், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். நீா் வற்றியிருந்த கிணற்றில் பாறைகள் மீது விழுந்ததால் தலையில் பலத்த அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.