கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், வி.சித்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் பாலமுருகன் (14). இவா், கீழக்கல்பூண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வழங்கம்போல, திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்ற பாலமுருகன், பிற்பகல் சுமாா் 3 மணியளவில் கழிப்பறைக்கு செல்வதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வகுப்பறையில் இருந்து வெளியே சென்றாா். பின்னா், வகுப்பறைக்கு திரும்பி வராத நலையில், அப்பகுதியில் உள்ள தரைக் கிணற்றில் பாலமுருகன் இறந்து கிடந்தாா். இயற்கை உபாதைக்காக சென்றபோது கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் அளித்த தகவலின்பேரில், திட்டக்குடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த மாணவா் பாலமுருகனின் சடலத்தை மீட்டனா். இதையடுத்து, போலீஸாா் சடலத்தை உடல்கூராய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.