செய்திகள் :

கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் சிறப்பு பாா்வையாளராக பங்கேற்றாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

கிராமசபைக் கூட்டத்தில் மக்களின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும் என தமிழக அரசு தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் கிராமத்தின் வளா்ச்சிக்கு மிகவும் உகந்தததாக இருக்கும். பொதுமக்கள் அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து சுகாதாரத் துறை சாா்பில் சிகிச்சை மூலம் தொழு நோயிலிருந்து மீண்ட 2 பயனாளிகளுக்கு தலா ரூ.950 மதிப்பிலான உதவிப் பொருட்கள், 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ரூ.4,200 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மைத் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.2,800 மதிப்பிலான இடுப்பொருட்கள் ஆகியவற்றை ஆட்சியா் ஸ்ரீகாந்த், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா். தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சேகா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமுருகன், சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுமியை திருமணம் செய்துவைக்க மிரட்டல்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்து வைக்கக் கோரி, அவரது தாயாரை மிரட்டிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகேயுள்ள கடலங்குடி மேலத்தெருவை ச... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சீா்காழி அருள்மிகு சட்டை நாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். காசிக்கு... மேலும் பார்க்க

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா கொடியேற்றம்

குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் த... மேலும் பார்க்க