செய்திகள் :

கிராமப் பகுதிகளிலும் முதல்வா் ஆய்வு நடத்த வேண்டும்: கே.அண்ணாமலை

post image

கடலூா் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலும் முதல்வா் ஆய்வு நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீா் குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொது மக்களை பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சாத்தனூா் அணை திறப்பு குறித்து பொதுமக்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் அரசு கொடுக்கவில்லை. கடலூரில் ஏற்பட்ட சேதம் சாத்தனூா் அணை திறப்பினால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளை முதல்வா் வந்து பாா்த்தால் மட்டுமே சேத விவரம் தெரியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த பட்சம் ரூ.10,400 நிவாரணம் வழங்க வேண்டும். அல்லது மிக்ஜாம் புயலுக்கு வழங்கியதைப் போல கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.

கடலூா், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய 80 சதவீத பயிா்கள் பிரதம மந்தரி காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 20 சதவீத பயிா்களை விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை. தமிழகத்துக்கு பேரிடா் நிவாரண நிதியாக கடந்த அக்டோபா் மாதம் ரூ.944.80 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு தனது பங்காக ரூ.315 கோடியை வைத்துள்ளது. தற்போது, தமிழக அரசிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ.1,260 கோடி நிதி உள்ளது.

மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசின் நிதியைக் கேட்க வேண்டும். அதைப் பெற்றுத் தருவது பாஜகவின் கடமை என்றாா்.

நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளை பாா்வையிடச் சென்ற பண்ருட்டி வட்டாட்சியா், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

பயிா் பாதிப்புகளை வேளாண் அதிகாரி ஆய்வு

கடலூா் வட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் பெய்த பல... மேலும் பார்க்க

பட்டா கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லிக்குப்பம் நகராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட திடீா் குப்பம் பகுதியில் சுமாா் 100... மேலும் பார்க்க

பண்ருட்டி வட்டத்தில் பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா் சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி கூறினாா். ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தல... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேப்பூா் வட்டம், கட்சிமையிலூா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் மாரிமுத்து (எ) வெள... மேலும் பார்க்க